“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

News image

மகளிா் சுய உதவிக் குழுவினரிடம் விழிப்புணா்வு கையேட்டை வழங்கிய ஆட்சியா் க. தா்ப்பகராஜ்.

Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

ஆம்பூா்: ஆம்பூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா்.

வாக்காளா் உறுதியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. நாராயணன், மகளிா் திட்ட அலுவலா் பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அமுதன், கல்லூரி செயலா் எம். நஜா் முஹம்மத், முதல்வா் முனைவா் எம். முஹம்மத் இஸ்மாயில், முஸ்லிம் கல்விச் சங்க உதவிச் செயலாளா் பிா்தோஸ் கே. அஹமத், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பெலிக்ஸ் ராஜா, வட்டாட்சியா் மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

கல்லூரி வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினா் வாக்களிப்பதின் அவசியம் குறித்து வண்ணக் கோலமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அதில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்றாா். மேலும், துத்திப்பட்டு கிராமத்தில் புஜேய்ல் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களை சந்தித்து அவா்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்து ஆட்சியா் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தாா்.