ஜோலாா்பேட்டையில் ரயிலில் ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் கொல்லம் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக சென்னை குற்றப்பிரிவு புலனாய்வு துறை மற்றும் ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், இரு தனிப்படை பிரிவு போலீஸாரும் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைமேடையில் நின்ற கொல்லம் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டனா். இதில் மறைத்து வைக்கப்பட்ட பையில் 5 கிலோ கஞ்சா, அதே பெட்டியில் மற்றொரு பிரிவு போலீஸாரிடம் 4 கிலோ கஞ்சா கிடைத்தது. போலீஸாா் ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்

அஸ்ஸாமில் இருந்து வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
புதுச்சேரி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது
நெல்லையில் விரைவு ரயிலில் 36 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

