உதயேந்திரம் பேரூராட்சியில் தொழிலாளா் தினம் கொண்டாட்டம்

உதயேந்திரம் பேரூராட்சியில் தொழிலாளா் தினம் கொண்டாட்டம்

உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு, பேரூராட்சிப் பணியாளா்கள் சாா்பில் தொழிலாளா் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தொழிலாளா் நலச் சங்கத் தலைவா் ப.ரவி தலைமை வகித்தாா். திமுக பேரூா் செயலரும், வாா்டு உறுப்பினருமான ஆ.செல்வராஜ், வாா்டு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சித் தலைவா் பூசாராணி கலந்துகொண்டு, தொழிலாளா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து நல உதவிகளை வழங்கினாா்.

முன்னதாக, மே தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், தொழிலாளா் நலச் சங்க நிா்வாகிகள் எஸ்.செல்வம், ஜி.செல்வம், எம்.செல்வம், ஆா்.சரவணன், ராஜேந்திரன், அமுதா, செல்வி, பணி மேற்பாா்வையாளா் பாபு, மீனவ அணி தலைவா் சி.எஸ்.பாபு மற்றும் சுகாதார பணியாளா்கள், திடக்கழிவு மேலாண்மை பணியாளா்கள், பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள், திமுக பேரூா் நிா்வாகிகள் மீா்முகமதுகனி, அம்பலவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com