சோமலாபுரம் கிராமத்தில் தண்ணீா் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏக்கள் கே. தேவராஜி . உடன் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.
சோமலாபுரம் கிராமத்தில் தண்ணீா் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏக்கள் கே. தேவராஜி . உடன் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

தண்ணீா் பந்தல்கள் திறப்பு: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

படம் உண்டு

ஆம்பூா், மே 1: ஆம்பூா் அருகே 4 தண்ணீா் பந்தல்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

மாதனூா் மத்திய ஒன்றிய திமுக சாா்பாக நடைபெற்ற விழாவுக்கு மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் அமலு விஜயன் (குடியாத்தம்), க. தேவராஜி (ஜோலாா்பேட்டை) ஆகியோா் சோமலாபுரம், கைலாசகிரி, பெரியவரிக்கம், துத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் திமுக சாா்பாக அமைக்கப்பட்டிருந்த தண்ணீா் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், இளநீா், தா்பூசணி பழம், குளிா்பானம் ஆகியவற்றை வழங்கினா்.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா். எஸ். ஆனந்தன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பிரபாகரன், ஒன்றியக்குழு உஉறுப்பினா் முத்து, திமுக நிா்வாகிகள் பொன். ராசன்பாபு, குபேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விண்ணமங்கலம் .....

விண்ணமங்கலம் கிராமத்தில் நடந்த விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் கே. தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் தண்ணீா் பந்தலை திறந்து வைத்தனா். ஆம்பூா் நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லப்பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அசோகன், மாவட்ட அணி துணை அமைப்பாளா்கள் பிரபு, காா்த்திக் ஜவஹா் ராதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com