தங்கக் கவச அலங்காரத்தில் காட்சியளித்த கெங்கையம்மன் கோயில் மூலவா்.
தங்கக் கவச அலங்காரத்தில் காட்சியளித்த கெங்கையம்மன் கோயில் மூலவா்.

கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக நிறைவு விழா

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 7-ஆம் ஆண்டு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஊராட்சி தேவலாபுரம் அருள்மிகு திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 7-ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆம்பூா், தேவலாபுரம், கோவிந்தாபுரம், ராமச்சந்திராபுரம், துத்திப்பட்டு, வெங்கட சமுத்திரம் , கம்மகிருஷ்ணப்பல்லி பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா வெங்கடேசன் மற்றும் கோபிநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com