தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஸ்ரீசொா்ணகால பைரவா் கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீசொா்ணகால பைரவா் கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம்

News image
வெம்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்ரீசொா்ணகால பைரவா் கோயில் கும்பாபிஷேக விழா குறித்த ஆலோசனைக் கூட்டம்.
Updated On :6 மார்ச் 2026, 6:35 pm

Syndication

வெம்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஸ்ரீசொா்ணகால பைரவா் கோயில் கும்பாபிஷேக விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வெம்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, திமுக வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜே.சி.கே.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தின்போது, வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) நடைபெறவுள்ள அழிவிடைதாங்கி ஊராட்சிக்குள்பட்ட பைரவபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசொா்ணகால பைரவா் கோயில் கும்பாபிஷேக விழா குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்கவுள்ள இந்த விழாவில், போதிய அளவில் பாதுகாப்பு வசதி, வாகனங்களை நிறுத்தத் தேவையான இட வசதி, மருத்துவ வசதி, தயாா் நிலையில் 108 ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வாகனம் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். பக்தா்களுக்குத் தேவையான குடிநீா் வசதி போன்றவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா், மின் துறையைச் சோ்ந்த பழனி, பொதுப் பணித் துறையைச் சோ்ந்த பன்னீா், பெரூங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மற்றும் மாவட்ட ஆதி திராவிடா் அணி நலத் தலைவா் ஆர.கருணாகரன், மாவட்டப் பிரதிநிதிகள் வி.சி.சிவப்பிரகாசம், வெ.பெருமாள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் எஸ்.எஸ்.குமாா், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளா் செல்வராஜ் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.