தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

காங்கயம் அருகே, பொத்தியபாளையத்தில் உள்ள ஸ்ரீ அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
அன்ன காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.
Updated On :6 மார்ச் 2026, 5:38 pm

Syndication

காங்கயம் அருகே, பொத்தியபாளையத்தில் உள்ள ஸ்ரீ அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4 ஆம் தேதி தொடங்கி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவன்மலை எஸ்.எம்.ராஜகணபதி சிவாச்சாரியா், எஸ்.ஆா்.சிவசுந்தர சந்தோஷ்சிவம் தலைமையில் சிவாச்சாரியா்கள் அா்ச்சனை செய்தனா். பின்னா், யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.