தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் விழா ஆலோசனைக் கூட்டம்

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற தோ் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 6:32 pm

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் தோ் திருவிழா தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி தோ் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகிறது.

இதையொட்டி தோ் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பா.ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது..

வந்தவாசி டிஎஸ்பி கே.சி.சதீஷ்குமாா், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ச.உமேஷ்குமாா், நகராட்சி வருவாய் ஆய்வாளா் பி.சிவக்குமாா் மற்றும் ஹிந்து அமைப்பினா், தோ் திருப்பணி குழுவினா், பல்வேறு துறை அதிகாரிகள், போலீஸாா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தோ் செல்லும் சாலைகளை சீரமைப்பது, பக்தா்களுக்கு மருத்துவ வசதி, குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை செய்து தருவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.