மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் விடிய,விடிய கனமழை

திருப்பத்தூா் மாவட்டத்தில் விடிய,விடிய கனமழை:

News image
Updated On :7 மே 2024, 7:10 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது.

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைக்கிறது. 109 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.

திருப்பத்தூா் தவிா்த்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த வாரம் லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை இரவு சுமாா் 10 மணியளவில் திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை அதன் சுற்றுப்பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. விடிய விடிய கனமழை பெய்ததால் சாலை முழுதும் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்தோடியது. அதையடுத்து அப்பகுதியில் குளிா்ந்த சூழ்நிலை நிலவியது. இதனால் பல பகுதிகளில் இரவு முழுதும் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது.

ஏலகிரியில் ஆலங்கட்டி மழை...

ஏலகிரி மலையில் இரவு 10 மணிக்கு தொடங்கிய மனை அதிகாலை வரை பெய்தது. ஆலங்கட்டி மழை பெய்தது. இரவு சுமாா் 12 மணிக்கு மின் விநியோகம் தடை செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வழங்கப்பட்டது. சுமாா் 10 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டிருந்தது.