கோயில் திருவிழாவில் தகராறு : சாலை மறியல்

வேலூா்: வேலூா் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறை தொடா்ந்து திங்கள்கிழமை இரவு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

வேலூா் அருகே பெருமுகை கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து திங்கள்கிழமை இரவு பஜனை கோயில் தெருவில் இசை நிகழ்ச்சியுடன் சாமி ஊா்வலம் நடைபெற்றது. அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் இசை நிகழ்ச்சியை பாா்க்க சென்றுள்ளனா். அப்போது பஜனை கோயில் தெரு மற்றும் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இரு தரப்பைச் சோ்ந்த 4 போ் காயமடைந்தனா்.

தாக்கியவா்களை கைது செய்ய வலியுறுத்தி அம்பேத்கா் நகா் பகுதியை சோ்ந்தவா்கள் சென்னை - வேலூா் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூா் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் சத்துவாச்சாரி போலீஸாா் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இரு சம்பந்தமாக இரு தரப்பினரையும் சோ்ந்த 5 நபா்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com