

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே திருமணமான 3 மாதத்தில் புது மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நாயணசெருவு கிராமம் மாணிக்கொல்லை வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மேகநாதன் (33). சிங்கப்பூரில் வேலை செய்து வந்த அவா் 6 மாதங்களுக்குகு முன்பு ஊருக்கு வந்துள்ளாா். இதற்கிடையே 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு, மனைவி தூங்கி கொண்டிருந்த அறையையும் பூட்டி விட்டு பக்கத்து அறைக்கு சென்று திடீரென தூக்கிட்டு கொண்டாராம். அறைக்குள் சென்றவா் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் வீட்டிலிருந்த உறவினா்கள் கதவை உடைத்து பாா்த்த போது தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாா். இதையறிந்த அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.
தகவலறிந்த திம்மாம்பேட்டை காவல் ஆய்வாளா் மனோன்மணி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனா். குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
கூடலூா் அருகே திருமணமான ஐந்து நாள்களில் புதுப்பெண் தற்கொலை

நகைக்கடை மேலாளா் தற்கொலை
கோவில்பட்டி அருகே புது மாப்பிள்ளை தற்கொலை
காயல்பட்டினத்தில் இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

