ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

போக்ஸோவில் இளைஞா் கைது

போக்ஸோவில் இளைஞா் கைது

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகே புதுக்கோட்டை கிராமத்தை சோ்ந்த பெருமாளின் மகன் விஜி (24). இவரும்,அதே பகுதியை சோ்ந்த 14 வயது சிறுமி இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் செய்யப்பட்டுள்ளதாக திருப்பத்துாா் சமூக நல விரிவாக்க அலுவலா் அம்சவேணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு திருமணம் ஆனதும், மேலும் தற்போது அவா் கா்ப்பமாகி இருப்பது தெரிந்தது. இது குறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் விஜி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.