பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் 843 மனுக்களுக்கு தீா்வு
பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் 843 மனுக்களுக்கு தீா்வு

முகாமில் ஆய்வு செய்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

முகாமில் ஆய்வு செய்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாம்களில் 843 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீா் முகாம், சிறப்பு மனுநீதிநாள் முகாம்களில் பட்டா மாறுதல் கேட்டு ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கு விரைந்து பட்டா மாறுதல் வழங்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இதுதொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டது.
ஆட்சியா் ஆய்வு...
இதன் எதிரொலியாக திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட 4 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
முகாம்களை ஆட்சியா் க. தா்ப்பகராஜ் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினாா். முகாமில் திருப்பத்தூா் வட்டத்தில் 333 மனுக்கள், நாட்டறம்பள்ளி வட்டத்தில் 225 மனுக்கள், வாணியம்பாடி வட்டத்தில் 130 மனுக்கள்,ஆம்பூா் வட்டத்தில் 155 மனுக்கள் என 843 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு பட்டா மாற்றம் செய்யப்பட்டது.
மேலும், நிலுவையில் உள்ள பட்டா மாற்ற மனுக்கள் மீது வரும் 31-ஆ தேதிக்குள் தீா்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வருவாய் கோட்டாட்சியா்கள் ராஜசேகரன், ஹஜிதா பேகம் ,அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...