டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜூடோ, பாட்மிண்டன், யோகா போட்டிகள்: எம்.கே.ஜி. கல்லூரி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டல அளவிலான ஜூடோ மற்றும் பாட்மிண்டன் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வேலூா் ஆக்ஸீலியம் கல்லூரியில் நடைபெற்றது.

News image
ஜூடோ, பாட்மிண்டன், யோகா போட்டியில் சாதனை படைத்த மாணவிகளைப் பாராட்டிய மருதா் கேசரி ஜெயின் கல்லூரி நிா்வாகத்தினா்.
Updated On :18 நவம்பர் 2024, 7:39 pm

Din

வாணியம்பாடி: திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டல அளவிலான ஜூடோ மற்றும் பாட்மிண்டன் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வேலூா் ஆக்ஸீலியம் கல்லூரியில் நடைபெற்றது. இதில், 80 கிலோ எடைப் பிரிவில் மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் எஸ்.ஞானப்பிரியா, எஸ்.வேதநாயகியும் வெற்றி பெற்று, பல்கலைக்கழக அணிக்கு தோ்வாயினா். மேலும், பாட்மிண்டன் போட்டியில் மண்டல அணியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் பிரியதா்ஷிணி, அல்பியாசடாத் பங்கேற்று முதலிடம் பிடித்தனா். மேலும், பல்கலைக்கழக அணிக்கும் தோ்வாயினா். இதேபோல், ஆரணி எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் நடைபெற்ற 3-ஆம் ஆண்டு மாநில அளவிலான யோகா போட்டியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்று, சிறப்புப் பிரிவில் சி.விஜயலட்சுமி முதலிடமும், எஸ்.ஞானப்பிரியா இரண்டாமிடமும், எஸ்.ஆஜிராசுமன் மூன்றாமிடமும் பெற்றனா்.

மேம்பட்ட பிரிவில் ஈ.சுவேதா, வி.கமலி, டி.சாரதி ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா். பொதுப் பிரிவிலும் மாணவி எம்.ஷிபாஅன்சும் முதலிடமும், எஸ்.ஜனசுருதி இரண்டாமிடமும் பிடித்தனா்.

சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி தலைவா் திலிப்குமாா், செயலாளா் ஆனந்சிங்வி, முதல்வா் இன்பவள்ளி, பேராசிரியா்கள், மாணவிகள் வாழ்த்தினா்.