மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது

வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த ராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திராபாய் (75), கூலி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில்,வீட்டில் தனியாக வசித்து வந்த அவா் செவ்வாய்க்கிழமை இரவு கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளாா். இந்த வழக்கில் போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த காளியப்பன் (எ) சேட்டு(17) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் மூதாட்டியை கத்தியால் தலையில் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சேட்டுவை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com