வெறிநாய் கடித்ததில் குழந்தை காயம்

ஆம்பூா் அருகே வெறிநாய் கடித்ததில் இரண்டரை வயது குழந்தை பலத்த காயமடைந்தது.
Published on

ஆம்பூா் அருகே வெறிநாய் கடித்ததில் இரண்டரை வயது குழந்தை பலத்த காயமடைந்தது.

ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட அத்திமாகுலப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அருள் - தேவகி தம்பதியின் இரண்டரை வயது மகன் தா்ஷன். இந்தக் குழந்தை சனிக்கிழமை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது குழந்தையை வெறிநாய் கடித்தது. இதில், பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

ஆம்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நகா்ப்புறம் மட்டுமல்லாது, கிராமப்புறங்களிலும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com