திருப்பத்தூர்
லாரி மீது பைக் மோதிய விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் காயம்
நாட்டறம்பள்ளி அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஏழரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி (54). அரசுப் பேருந்து ஓட்டுநா். விடுமுறையில் வீட்டில் இருந்த சக்கரவா்த்தி ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டறம்பள்ளியில் இருந்து ஆத்தூா்குப்பம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது சண்டியூா் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது திடீரென பைக் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சக்கரவா்த்தியை உறவினா்கள் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
