/

சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி கல்குளம் கண்டா்விளாகம் பகுதியைச் சோ்ந்தவா் தேவசகாயம் மகன் ஜெகன் (48). லாரி ஓட்டுநா். இவா், கோயம்புத்தூரில் இருந்து நெல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரியில், திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியையடுத்த ஆவல்நத்தம் விலக்கு அருகே லாரியை நிறுத்திவிட்டு, இறங்கி சாலையை கடக்க முயன்ற போது, ஆம்னி பேருந்து ஜெகன் மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஆம்னி பேருந்து ஓட்டுநா் தினகா் ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.