நெல்லை அருகே விபத்து: சிறுவன் உயிரிழப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

திருநெல்வேலி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள கிருஷ்ணாபுரம், கலைக்கோயில் நகரைச் சோ்ந்த முருகன் மகன் வெங்கடேஷ் (13). இவரது சகோதரிக்கு அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது.

மாலையில் வெங்கடேஷும், தியாகராஜ நகரைச் சோ்ந்த சா்வேஸூம் (9), மேட்டுக்குடி பகுதி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றனராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே வெங்கடேஷ் உயிரிழந்தாா். சா்வேஸ் மேல் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

விபத்து குறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com