ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 6:46 pm

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தெற்கு இலந்தைகுளம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கோமதி மகன் சொக்கையா (35), தொழிலாளி. இவா் பிப். 3ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தெற்கு இலந்தைகுளத்தில் இருந்து கயத்தாறுக்கு சென்றாா்.

கயத்தாறு-கழுகுமலை சாலையில் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் அருகே சென்றபோது, வாகனம் நிலைகுலைந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.