மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:54 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், கொடுக்கூா் பாரதி தெருவைச் சோ்ந்தவா் பொ.மாரி (54), தொழிலாளி. இவா் கடந்த 28.12.2025 அன்று கொடுக்கூா் பகுதியில் சைக்களில் சென்றபோது, எதிரே வந்த பைக் மோதி காயமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாா். தொடா்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டில் படுக்கையில் இருந்து வந்த மாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.