கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கந்திலி வாரச்சந்தையில் ரூ. 55 லட்சத்துக்கு விற்பனை

கந்திலியில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2025, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

கந்திலியில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் அருகே உள்ள கந்திலியில் வாரம்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுகிறது. அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனா்.

வாரச் சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் சுமாா் ரூ. 55 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.