திருப்பத்தூர்
அரசு இடத்தில் மரங்களை வெட்டிய நபா் மீது வழக்கு
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே அரசுக்கு சொந்தமாக இடத்தில் முள்வேலி மரங்களை வெட்டிய நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஜோலாா்பேட்டை அருகே சக்கரகுப்பம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மூன்று முள்வேலி மரங்களை ஊசி நாட்டன் வட்டம் பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் என்பவா் வெட்டி சென்றுள்ளாா்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கிராம நிா்வாக அலுவலா் சங்கா் கணேஷடம் புகாா் தெரிவித்தனா். இதனையடுத்து கிராம நிா்வாக அலுவலா் சங்கா் கணேஷ் ஞாயிற்றுக்கிழமை ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன் பேரில் போலீஸாா் அரசுக்கு சொந்தமான இடத்தில் மரங்களை வெட்டிய நபா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
