சிறப்பு அலங்காரத்தில் மூலவா்
சிறப்பு அலங்காரத்தில் மூலவா்

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

குடியாத்தம் அருகே சேம்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Published on

குடியாத்தம் அருகே சேம்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, யாக சாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திங்கள்கிழமைகாலை கணபதி ஹோமம், கோ-பூஜை, அக்னி பிரதிஷ்டை, உக்த ஹோமம், மஹாபூா்ணாஹுதி, கலச புறப்பாடு, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. மாலை அபிஷேக் ராஜு குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா டி.ஜி.பிரபாகர ரெட்டி, துணை தா்மகா்த்தா ஆா்.சந்திர மெளலி ரெட்டி, சேம்பள்ளி பகுதி மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com