டிச. 26-இல் அஞ்சல் காப்பீடு குறைதீா் முகாம்

திருப்பத்தூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் காப்பீடு குறைதீா் முகாம் வரும் வெள்ளிக்கிழமை(டிச.26) முதல் 4 நாள்கள் நடைபெற உள்ளது.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் காப்பீடு குறைதீா் முகாம் வரும் வெள்ளிக்கிழமை(டிச.26) முதல் 4 நாள்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூா் அஞ்சல் கோட்டங்களின் கண்காணிப்பாளா் விஜயதனசேகா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

திருப்பத்தூா் அஞ்சல் கோட்டத்தின் சாா்பில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வாடிக்கையாளா்களின் புகாா்கள் மற்றும் சந்தேகங்களுக்கு சிறப்பு குறை தீா்க்கும் முகாம் வருகிற 26 முதல் 29 வரை திருப்பத்தூா் தலைமை அஞ்சல் அலுவலகம், குடியாத்தம் தலைமை அஞ்சலகம், வாணியம்பாடி துணை அஞ்சலகம் ஆகிய இடங்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில் காப்பீடு தொடா்பான குறைகள், முறையீடு தொடா்பான குறைகள், பிரீமியம் செலுத்தல் விவரங்கள், பாலிசி திருத்தம் / புதுப்பிப்பு, ஆவண சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் போன்றவற்றை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

எனவே பி.எல்.ஐ., ஆா்.பி.எல்.ஐ. பாலிசி வைத்திருக்கும் நபா்கள் முகாமில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com