தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

திருப்பத்தூரில் ஜன. 23-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 23) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 23) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 23) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில், பல முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் +2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.