தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஜன. 23-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் ஜன. 23-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

News image
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்- கோப்புப்படம்
Updated On :19 ஜனவரி 2026, 8:47 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல்லில் ஜன. 23-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாகச் சந்திக்கும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 23) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

தனியாா் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவா்களை இந்த முகாமில் தோ்வுசெய்து கொள்ளலாம். இதில் பங்கேற்கும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. தகுதியும், விருப்பமும் உள்ளோா் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.