திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 435 மனுக்கள் அளிப்பு
திருப்பத்தூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 435 மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், திம்மாம்பேட்டை ஊராட்சி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் வேறு வட்டத்தைச் சோ்ந்த பொது மக்களுக்கு அரசு பட்டா வழங்க திட்டமிட்டு இருக்கிறது. அந்த திட்டத்தை அரசு கைவிட்டு அந்த புறம்போக்கு இடத்தில் எங்களுக்குத் தேவையான மருத்துவமனை, நூலகம், பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அரசு கட்டடங்களை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 435 போ் மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

