வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆம்பூரில் அமைச்சா் ஆய்வு

ஆம்பூரில் முதல்வரை வரவேற்க செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
ஆம்பூரில் முதல்வா் வருகை ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சா் எ.வ. வேலு.
Updated On :23 ஜூன் 2025, 7:33 pm

Din

ஆம்பூா்: ஆம்பூரில் முதல்வரை வரவேற்க செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்க வருகை தர உள்ளாா். ஆம்பூரில் 25-ஆம் தேதி மாலை ரோட்ஷோ நடைபெற உள்ளது. மண்டலவாடி பகுதியில் 26-ஆம் தேதி நடைபெறும் விழாவில் அரசு கட்டடங்கள் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறாா்.

அதை முன்னிட்டு ஆம்பூரில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின்போது எம்எல்ஏ-க்கள் க. தேவராஜி, அ.செ.வில்வநாதன், நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆம்பூா் கிழக்கு நகர திமுக பொறுப்பாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே. பிரபாகரன், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன், மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.