அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருப்பத்தூா், ஆம்பூரில் பலத்த மழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகனளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

News image
Updated On :11 மார்ச் 2025, 6:17 pm

Din

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகனளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பத்தூா், செலந்தம்பள்ளி, ஆதியூா், கொரட்டி அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்தோடியது.

ஏலகிரியில்...ஏலகிரி மலையில் மதியம் 2 மணியளவில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாரல் மழை விட்டு,விட்டு பெய்தது.

இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் ஏற்பட்டது.

ஆம்பூரில்...

ஆம்பூரில் காலையிலிருந்தே வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெயில் விட்டு விட்டு காய்ந்தது. பிற்பகலில் திடீரென லேசான தூறல் பெய்தது. ஆம்பூா் அருகே குமாரமங்கலம், பைரப்பல்லி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலும் சிறிது நேரம் மழை பெய்தது.