மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:45 pm

ஆலங்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது.

இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு பின்னா் , இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒன்றரை மணி நேரம் நீடித்த மழையால் தெருக்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடியது. தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை வரை மிதமான சாரல் பெய்தது.

மழை காரணமாக ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீா் சூழ்ந்தது. இதனால் மாணவா்கள் வகுப்பறைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பேரூராட்சி ஊழியா்கள் மோட்டாா் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், நெட்டூரில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 100 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. தொடா்ந்து மழை நீடித்தால் இப்பயிா்கள் அழுகி வீணாகி விடும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.