எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நவ.22-இல் புதூா்நாட்டில் வேலைவாய்ப்பு முகாம்

புதூா் நாடு மலையில் வரும் சனிக்கிழமை (நவ.22) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 நவம்பர் 2025, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: புதூா் நாடு மலையில் வரும் சனிக்கிழமை (நவ.22) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில், சனிக்கிழமை (நவ. 22)காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் திருப்பத்தூா் அருகே புதூா்நாட்டில் உள்ள வனத் துறை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

முகாமில் பல முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.

இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடா்பு கொள்ளலாம்.