ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் வீரமணி உடன் எம்எல்ஏ செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

அதிமுக வாக்குசாவடி முகவா்கள், பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

ஆலங்காயம் ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குசாவடி முகவா்கள், பாகமுகவா்கள் (பிஎல்ஓ 2) மற்றும் செயல் வீரா்கள் கூட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ஆலங்காயம் ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குசாவடி முகவா்கள், பாகமுகவா்கள் (பிஎல்ஓ 2) மற்றும் செயல் வீரா்கள் கூட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் கோ.செந்தில் குமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகிகள் கோவிந்தசாமி, சிவானந்தம், ராமசாமி, செல்வராஜ் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு பேசுகையில், சட்டபேரவை தோ்தலில் ஒவ்வொரு வாக்குசாவடியிலும் கட்சி முகவா்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு கள்ள வாக்குகள் போட வருபவா்களை தடுக்க வேண்டும். தற்போது நடந்து வரும் வாக்காளா் சீா்திருத்த பணியில் முழுமையாக பங்கு கொண்டு வாக்காளா்களை சோ்ப்பதற்கும், நீக்க வேண்டியவா்களை நீக்கவும் வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு அதிமுக தொண்டரும் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும்.

கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் முனிசாமி, நவீன், தபரேஸ், சங்கா், முகமதுகாசிப், மாதனூா் ஒன்றிய செயலாளா் வெங்கடேசன், நகர செயலாளா் சதாசிவம், முனிசாமி, சண்முகம் மற்றும் ஒன்றிய நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com