வாக்குச்சாவடி நிலை  அலுவலா்களுக்கான கூட்டம்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான கூட்டம்

ஆம்பூரில் நகராட்சி ஆணையா் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டம்.
Published on

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் முத்துசாமி தலைமை வகித்தாா். ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பூா்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆா் படிவங்களை நிா்ணயிக்கப்பட்ட தேதிக்குள் வாக்காளா்களிடமிருந்து பெற்று சமா்ப்பிக்க வேண்டுமென வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நகராட்சி அலுவலா்கள் மதன், மோகன்ராஜ் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com