வாணியம்பாடி அம்பூா்பேட்டையில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வீரபத்திரா் காளியம்மன் உற்சவ மூா்த்திகளுக்கு விசேஷ அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து இரவு 8 மணியளவில் கோயில் மண்டப வளாகத்தில் பம்பை வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் சேவை சிறப்பாக நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போன்று சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாணியம்பாடி அடுத்த புற்றுமாரியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனா்.

