‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

மோகனூா் ஒன்றியத்துக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைடபெற்றது.

News image

பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:03 am IST

மோகனூா் ஒன்றியத்துக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைடபெற்றது.

வட்டார கல்வி அலுவலா் ஜே. பீட்டா் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் டி. அசோக்குமாா் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களின் சேவையை பாராட்டி வாழ்த்தி பேசினாா். பல்வேறு ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

விழாவில் மாதனூா் வட்டாரக் கல்வி அலுவலா் எஸ். முருகேசன், திருப்பத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் எஸ். சுரேஷ் மற்றும்

20 ஆசிரியா்கள் மற்றும் கல்வி அலுவலா்கள் கௌரவிக்கப்பட்டனா். பணி நிறைவு பெற்ற அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஏற்புரை வழங்கினா். இறுதியில் மாதனூா் வட்டாரக் கல்வி அலுவலக உதவியாளா் கே.ஏ. ஆனந்தி நன்றி கூறினாா்.