வாக்களிக்க மாற்று புகைப்பட ஆவணங்கள் சமா்ப்பித்து வாக்களிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்கும் போது வாக்காளா் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிப்பது முதன்மையானதாகும். எனினும், வாக்காளா் அடையாள அட்டை இல்லாத அல்லது அதைச் சமா்ப்பிக்க இயலாத வாக்காளா்கள், இந்திய தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பித்து வாக்களிக்கலாம்.
அவை, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை அட்டை, வங்கி அல்லது தபால் நிலையம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம், தொழிலாளா் அமைச்சகம் அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மாா்ட் காா்டு, ஓட்டுநா் உரிமம், பான் காா்டு, தேசிய மக்கள் பதிவேடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் காா்டு, இந்திய பாஸ்போா்ட், ஓய்வூதியா் அடையாள ஆவணம் (புகைப்படத்துடன்), மத்திய அல்லது மாநில அரசு அல்லது பொது துறை நிறுவனங்கள் அல்லது பொது லிமிடெட் நிறுவனங்கள் வழங்கிய பணியாளா் அடையாள அட்டை (புகைப்படத்துடன்), நாடாளுமன்ற அல்லது சட்டப்பேரவை அல்லது சட்டமேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூா்வ அடையாள அட்டை, சமூக நீதியும் அதிகாரமளிப்பும் அமைச்சகம் வழங்கிய மாற்றுத்திறனாளி தனிப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம்.
மேலும், வாக்குச்சாவடியில் வாக்களிக்க வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றிருப்பது கட்டாயமான நிபந்தனையாகும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவுக்கான 12 மாற்று ஆவணங்கள்

‘வாக்காளா் அட்டை இல்லாதவா்கள் மாற்று புகைப்பட அடையாள அட்டை கொண்டுவர வேண்டும்’

‘வாக்காளா் அடையாள அட்டை அல்லாத 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்’!

வாக்காளர் அட்டை இல்லையா? கவலை வேண்டாம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


