மாதனூா் அருகே சனிக்கிழமை இரவு லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு ஏரிகுத்தி பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (37), விக்னேஷ்(25) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வேலூா் நோக்கிச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் அருகே வெங்கிளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது லாரி மோதியது.
இதில் பலத்த காயமடைந்த உதயகுமாா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.
இது குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக்குள் மோதல்: சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

புளியங்குளத்தில் பேருந்து-பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு

நடந்து சென்றவா் மீது பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |



