காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நாயக்கனேரிமலை அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆய்வு

நாயக்கனேரிமலை ஊராட்சியில் மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவை ஆய்வு செய்த ஒன்றியக்குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா்.

Published On :

நாயக்கனேரிமலை ஊராட்சியில் மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் அமைந்துள்ள அரசு உா்நிலைப் பள்ளியில் பழுதடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை மாதனூா் ஒன்றியக்குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கிராம ஊராட்சி மூலம் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

மேலும் அங்கு சத்துணவு கூடத்தில் மாணவா்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டு ஆய்வு செய்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், பொறியாளா் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினா் காா்த்திக் ஜவஹா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.