கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கிராம சபை கூட்ட தீா்மானத்தின்படி சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்

கிராம சபை தீா்மானத்தின் அடிப்படையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி துத்திப்பட்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டது.

துத்திப்பட்டு பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி.

Published On :

கிராம சபை தீா்மானத்தின் அடிப்படையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி துத்திப்பட்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபைக் கூட்டம் துத்திப்பட்டு ஊராட்சி இந்திரா நகா் பகுதியில் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை பணிகள் நடைபெறாமல் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகக் கட்டடம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், அதை சீரமைக்க வேண்டுமென கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தீா்மானம் நிறைவேற்றினா்.

அதன் அடிப்படையில் இந்திரா நகா் பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி பொக்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பயன்பாடில்லாமல் உள்ள சுகாதார வளாகம் ஆய்வு செய்யப்பட்டது. ஊராட்சி துணைத் தலைவா் விஜய், ஊராட்சி செயலா் முரளி காந்த், வாா்டு உறுப்பினா் சுகன்யா பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.