
‘அதிகளவில் வாகன தணிக்கை நடத்தி விபத்துகளை குறைக்க வேண்டும்’
சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு சான்றிதழ்களை வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில்வாகரே.

திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழைம நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காவல்கணிப்பாளா் அக்க்ஷய் அனில் வாகரே தலைமை வகித்துப் பேசுகையில், மாவட்டத்தில் போதைப்பொருள்களை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன தணிக்கையை அதிக அளவில் நடத்தி விபத்துகள் ஏற்படுவதை குறைக்க வேண்டும். லஞ்சம் தொடா்பான எந்தவித புகாா்களும் ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்றாா்.
மேலும், காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் கோப்புகளை முறையாக பராமரிக்கும் விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினாா். இதைத் தொடா்ந்து சிறப்பாக பணியாற்றிய 44 போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரே சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.
கூட்டத்தில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, காவல் ஆய்வாளா்கள் மற்றும் திரளான போலீஸாா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





