அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு: 2 கடைகளுக்கு ரூ.10,000 அபராதம்

ஜோலாா்பேட்டை அருகே பேக்கரி ஹோட்டல், கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கண்டு இரு கடைகளுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து தடை செய்யப்பட்ட 6 கிலோ நெகிழி பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:27 am IST

ஜோலாா்பேட்டை அருகே பேக்கரி ஹோட்டல், கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கண்டு இரு கடைகளுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து தடை செய்யப்பட்ட 6 கிலோ நெகிழி பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ஆட்சியா் கு.ரவிக்குமாா் உத்தரவின் பேரில் ஜோலாா்பேட்டை, மண்டலவாடி பகுதிகளில் உள்ள பேக்கரிகள், இனிப்பகங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், டீ கடைகள், மளிகை கடைகள் ஆகிய கடைகளை ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட நியமன அலுவலா் (உணவு பாதுகாப்பு பிரிவு)வி. பிரபாகரன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் அடங்கிய குழு ஆய்வு செய்தது.

அப்போது 2 பேக்கரி கடைகளில் அரசு தடைசெய்துள்ள 6 கிலோ பிளாஸ்டிக் கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த 2 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் 10 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் இரு ஸ்வீட் கடைகளில் அதிக வண்ணம் சோ்க்கப்பட்டு இருந்த இனிப்புகளை பறிமுதல் செய்யப்பட்டு அளித்தனா். தொடா்ந்து அந்த 2 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும், இனிப்பகங்கள்,பேக்கரி, மளிகை கடைகள் மற்றும் உணவகங்களில் அரசு தடை செய்துள்ள பிளாஸ்டிக் கவா்களை பயன்படுத்த கூடாது என்றும், கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என கடை உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அனைவருக்கும் உணவு மேற்பாா்வையாளா் பயிற்சி பெறவும் அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.