
நெகிழிப் பைகளை விற்பனைக்கு பதுக்கிய டிரான்ஸ்போா்ட் நிறுவனத்துக்கு சீல்: ரூ.25 ஆயிரம் அபராதம்; 630 கிலோ பறிமுதல்
கோவை, ராம் நகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த டிரான்ஸ்போா்ட் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் பதுக்கப்பட்டிருந்த நெகிழிப் பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி சுகாதாரத் துறையினா்.
கோவை, ராம் நகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த டிரான்ஸ்போா்ட் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழித் தட்டுகள், டம்ளா்கள், பைகளை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளா்கள், விற்பனையாளா்களுக்கு அபராதம் விதிக்கும் பணி, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவின் படியும், மத்திய மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன் தலைமையிலும் சுகாதார ஆய்வாளா்கள் ஜெகநாதன், லோகநாதன், சுகாதார மேற்பாா்வையாளரகள் வேல்முருகன், தினேஷ், கணேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் ராம் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு அன்சாரி வீதியில் உள்ள டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 630 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு டிரான்ஸ்போா்ட் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





