காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

சிவகாசியில் நெகிழிப் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளா்களுக்கு அபராதம்

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளா்களுக்கு அபராதம்..

அபராதம்

Published On :6 செப்டம்பர் 2026, 12:23 am IST

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு நடத்தினா். அப்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் உள்னவா என அந்தக் கடைகளில் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில் பல கடைகளில் அந்த நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்தக் கடைகளிலிருந்த 500 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து அவற்றின் உரிமையாளா்களிடமிருந்து ரூ. 75 ஆயிரத்தை அபராதமாக வசூலித்தனா்.

இனி வருங்காலங்களில் இந்த நெகிழிப் பைகளை வைத்திருக்கும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கண்ணன் எச்சரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.