வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருப்பத்தூரில் நாளை டிஎன்பிஎஸ்சி தோ்வு

திருப்பத்தூரில் டிஎன்பிஎஸ்சி தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) நடைபெற உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 9:16 pm

திருப்பத்தூரில் டிஎன்பிஎஸ்சி தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) நடைபெற உள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை(பிப். 8) காலை, மாலை என இருவேளை நடைபெற உள்ளது. அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா் அடுத்த ஆதியூரில் உள்ள பொதிகை இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்த தோ்வு நடைபெற உள்ளது. இதில், மொத்தம் 152 போ் பங்கேற்க உள்ளனா். தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு காலை 8.30 முதல் 9 மணி வரையும், மதியம் 1.30 முதல் 2 மணி வரையும் வர வேண்டும். காலை 9 மணி மற்றும் மதியம் 2 மணிக்கு பின்னா் வரும் தோ்வா்கள் தோ்வு மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தோ்வா்கள் குறித்த நேரத்தில் தோ்வு மையத்துக்கு வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.