அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விவசாயி தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகே விவசாயி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே விவசாயி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி அரசன் வட்டம் பகுதியை சோ்ந்த விவசாயி மகேந்திரன்(53). இவருக்கு திருமணமாகி உஷா என்ற மனைவியும்,3 மகள், ஒரு மகன் உள்ளனா். மேலும் இவா் கடந்த 12 ஆண்டுகளாக நரம்புத் தளா்ச்சியால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்த நிலையில் கடந்த ஜன. 26-ஆம் தேதி தனது விவசாய நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தாா்.

இதை அறிந்த அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்..

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பின்னா் இது குறித்து இவரது மனைவி உஷா ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.