திருப்பத்தூா் அடுத்த கதிரிமங்கலத்தில் ரூ.84.20 லட்சத்தில் புதிய மாவட்ட வள மைய கட்டடத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
சென்னை, தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக பல்வேறு மாவட்டங்களில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில், முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
திருப்பத்தூா் ஒன்றியம், சுதிரிமங்கலம் ஊராட்சியில் மறுசீரமைக்கப்பட்ட தேசிய கிராம சுயாட்சி திட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட வள மைய கட்டடத்தினை குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி கொண்டு வந்தாா்.
அப்போது ஆட்சியா் பேசியது,
திருப்பத்தூா் வட்டாரத்தில் புதுக்கோட்டை ஊராட்சியில், ரூ.13.30 லட்சத்தில் பொது விநியோக கட்டடம், கதிரிமங்கலம் ஊராட்சியில், ரூ.84.20 லட்சத்தில் மாவட்ட வள மையம், கந்திலி வட்டாரத்தில், கிழக்கு பதனவாடி ஊராட்சியில், ரூ.8.30 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம், செவ்வாத்தூா் ஊராட்சியில் ரூ.41.35 லட்சத்தில் துணை சுகாதார நிலைய கட்டடம், சு..பள்ளிப்பட்டு ஊராட்சியில், ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலைய கட்டடம், ஆதியூா் ஊராட்சியில் ரூ.36 லட்சத்தில் 2 வகுப்பறைகள், மேல்அச்சமங்கலம் ஊராட்சியில், ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், தோக்கியம் ஊராட்சியில்,ரூ.13.03 லட்சத்தில் பொது விநியோக கட்டடம், கந்திலி ஊராட்சியில் ரூ.18 லட்சத்தில் 1 வகுப்பறை, சின்னகல்லுப்பள்ளி ஊராட்சியில், ரூ.41.35 லட்சத்தில் துணை சுகாதார மைய கட்டடம், அம்மனாங்கோவில் ஊராட்சியில், ரூ.32 லட்சத்தில் 2 வகுப்பறைகள் என 23 முடிவுற்றப்பணிகள் ரூ.705.10 லட்சத்தில் திறக்கப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சித் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், திருப்பத்தூா் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவா் விஜயா அருணாச்சலம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராஜேந்திரன், ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் சங்கீதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கவிதா தண்டபாணி, உதவி திட்ட அலுவலா் சிவக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

தோ்தல் செலவினங்களைக் கண்காணிக்க நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்

ரூ. 9.30 கோடியில் திட்டப் பணிகள்

இச்சிபுத்தூா் நடுநிலைப் பள்ளியில் ரூ.2 கோடியில் கட்டடம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


