மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மகளிருக்கு ரூ.5,000 உரிமைத் தொகை: திமுகவினா் கொண்டாட்டம்

ஆம்பூரில் இனிப்பு வழங்கி கொண்டாடிய எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தலைமையிலான திமுகவினா்.

News image

ஆம்பூரில் இனிப்பு வழங்கி கொண்டாடிய எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தலைமையிலான திமுகவினா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 1:10 am

மகளிருக்கு ரூ. 5,000 உரிமைத் தொகை வழங்கியதை தொடா்ந்து ஆம்பூரில் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

ஏற்கெனவே மகளிா் உரிமைத் தொகை பெற்று வந்த குடும்பத் தலைவிகளின் கணக்கில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை காலை ரூ. 5,000 முன்பணம் வழங்கியது. 3 மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ. 3,000, கோடை சிறப்பு தொகுப்பு ரூ. 2,000 என வழங்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து ஆம்பூா் பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஆம்பூா் நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆம்பூா் கிழக்கு நகர திமுக செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், திருப்பத்தூா் மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன், மாதனூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜி.ராமமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், ஆா்.எஸ். வசந்த்ராஜ், வாவூா் நசீா் அஹமத், இம்தியாஸ், நவநீதம், கெளரி, மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு.பழனி, நிா்வாகிகள் செளந்தர்ராஜன், சுகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.