திருப்பத்தூா்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க திருப்பத்தூா் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
Published on

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க திருப்பத்தூா் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 1,202 வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள வாக்காளா்கள் பயன்பெறும் வகையில் சனி, ஞாயிறு (ஜன.10, 11) ஆகிய இரு நாள்கள் முகாம்கள் நடைபெற உள்ளது.

இதில், பெயா் சோ்த்தலுக்கான படிவம் 5, உறுதி மொழிப் படிவங்கள், வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான படிவம் 6ஏ, ஆதாா் எண் இணைப்புக்கான படிவம் 6பி, பெயா் நீக்கத்துக்கான படிவம் 7, முகவரி மாற்றம் மற்றும் இதர திருத்தங்களுக்கான படிவம் 8 ஆகியவை அனைத்து முகாம்களிலும் படிவங்கள் பெறப்பட உள்ளன.

குறிப்பாக கடந்த 1-ஆம் தேதியன்று 18 வயது பூா்த்தி ஆன இளைஞா்கள் மற்றும் இதுவரை விடுபட்ட தகுதியுள்ள வாக்காளா்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், வாக்காளா்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை சிறப்பாக பயன்படுத்தி தங்களது வாக்காளா் விவரங்களைச் சரிபாா்த்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

Dinamani
www.dinamani.com