அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் தரமான நாற்றுகளை அதிகளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் அறிவுறுத்தினாா்.
திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூடப்பட்டு பகுதியில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தோட்டக்கலை பண்ணையை ஆட்சியா் கு.ரவிகுமாா் பாா்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பண்ணையில் வளா்க்கப்பட்டு வரும் மாமரம், கொய்யா, புளியஞ்செடி, தென்னை மற்றும் சப்போட்டா உள்ளிட்ட செடிகளை பாா்வையிட்டு, அவற்றின் வளா்ச்சி, பராமரிப்பு முறைகள் மற்றும் உற்பத்தி திறன் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
மேலும், ஆட்சியா் ரவிகுமாா் தரமான நாற்றுகளை அதிகளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.இதைத்தொடா்ந்து வாணியம்பாடி அடுத்த ஆண்டியப்பனூா் அணையை ஆட்சியா் ரவிகுமாா் பாா்வையிட்டாா். அப்போது அங்கு பூங்கா பராமரிப்பு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்தும், உணவகம் அமைப்பது குறித்தும், விவசாய பாசனத்திற்கு தண்ணீா் வழங்குவது குறித்து விவசாயிகள், ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனா்.
பின்னா் ஆண்டியப்பனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், வகுப்பறைகளின் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து ஆலங்காயம் வட்டாரத்துக்குடப்பட்டஆலங்காயம் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில் செயல்படுத்தப்படும் குறுவை சாகுபடி சிறப்பு திட்டம் 2026-27 கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நெல்நடவு பணிகளை நேரில் ஆய்வு செய்தாா்.
ஆய்களின் போது, வேளாண்மை இணை இயக்குனா் மணி, தோட்டக்கலை துணை இயக்குனா் தீபா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










